Saturday 21 May 2016

மண் மணக்கும் மருது

தென் தமிழ் நாட்டின் மண்வாசனையை அப்படியே செண்டிமெண்ட் குழைத்து இயக்குனர் முத்தையா உருவாக்கிய முரட்டுசிலையே மருது.

வாயில் கத்தியுடன் ,
வீரம் விளைஞ்ச ஆள் ஆறடி, கட்டுறுதியான உடல், திராவிட நிறமென. பச்சக்குன்னு ஒட்டிக்கொள்கிறார் மருது கேரக்டரில் விஷால். சூறாவளிடா என்ற ஓப்பனிங் சாங்ல் ஹீரோவின் குணம் சொல்லப்பட்டு , குத்துப்பாட்டுடன் ஆரம்பிக்க , கோவிலில் ஸ்ரீதிவ்யா(பாக்யலஷ்மி) வைப்பார்க்க , ஒரு மோதலில்..ஆளுக்காள் அறைந்துக்கொள்ள விஷாலின் பாட்டி(அப்பத்தா) யாக வரும் லீலா விஷாலை காதலிக்க சொல்ல..லவ்ஸ் தான் !

மகள் வயிற்றுப்பேரனைப் பாட்டி எடுத்து வளர்க்க..பாட்டிப்பேரன் செண்டிமெண்ட் -மெயின் டிஷ் படத்தில்.

ராஜப்பாளையத்தை சுற்றியுள்ள கதைக்களம் ! அதன்..தியேட்டர் , மில்..அரசியலிலும் பதவிகளைப்பெற்றுத்தரும் முக்கியப்புள்ளி பயில்வானாக ராதாரவி செம கெத்தாக வருகிறார்..முதலில் இருந்த வில்லத்தனம் போய்..விஷாலுடன் நட்புப்பாராட்டி.தானும் போய் கேரக்டர் ஆர்டிஸ்டாக , அப்ப வில்லனாக அவரால் வளர்த்துவிடப்பட்ட (தாரைதப்பட்டை வில்லன் ஆர்கே ஸ்டூடியோஸ்)சுரேஷ். படு தீவிரமாக கொடுரமாக காட்சி, அதற்கான உடல் என மிரட்டுகிறார்.

அருள்தாஸ், நமோ நாராயணாய ஆகியோரும் வில்லத்தனத்தில் பங்குகேட்கின்றனர்.

வில்லன் தவறு செய்ய அதை ஹீரோ தட்டிக்கேட்க அதற்கான காரணங்களில் செண்டிமெண்ட் முடிச்சுகள் போட்டு இறுதியில் வில்லனை வீழ்த்து , தொடைதெரிய வேட்டியை வரிந்துக்கட்டும் விஷால் மருதுவாக வெற்றிவாகை சூடமுடிச்சுக்களை அவிழ்த்து ரசிக்க வைக்கிறார் டைரக்டர்.

லோடுமேன்..வக்கீல் பெண்ணை விரும்ப அவளுக்காக இறங்கிசெய்யும் வேலைகள் , பரோட்டா சூரியின் காமெடி சேஷ்டைகள் என படம் முன்பாதியில் சிரிக்கவைக்க , பின்பாதியில் ஆக்‌ஷன் சீக்வென்ஸஸ் ல அடித்துத் துவைத்தப்படியே இருக்கின்றனர் ஹீரோவும் வில்லனும்.ஸ்ரீதிவ்யா படுபாந்தமாக தேவையான எக்ஸ்ப்ரெஷன்ஸில் கலக்கி ரசிக்க வைக்கிறார் அடுத்தவீட்டுப்பெண்ணாக.

சூரி அப்பத்தாவுடன் ஆன சீன்ஸ் ரகளை ரகம் ,இரண்டு உணர்ச்சிப்பெருக்கானக் காட்சிகளில் அழவும் வைக்கிறார்.

அறையோ அறை, வெட்டு .குத்து ,டிஷ்டிஷ்யூம் என மண்வாசனையும் புழுதியும் சேர்ந்துப்பறக்க , வசனங்களில் தெறிக்கவிடுகிறார் முத்தையா. கொம்பனில் ஈர்த்தது..எதோ குறைகிறேதே சார் !

அப்பத்தா நீ தெய்வம் என உருகும்போதும்.அப்பத்தாக்குப்பிடித்ததால் அந்தப்பொண்ணை லவ் பண்ணப்போறேன் எனும்போதும், விஷால் தனித்துத் தெறிக்கறார்.

அதிரடியாக பளார்ந்னு தைரியமாக அறையும் ஸ்ரீதிவ்யா , திருமணம் ஆனதும் மிக அடக்கமாக டிபிக்கல் ஹவுஸ் ஆகி ஏமாற்றம் தருகிறார். வக்கீலாக மாரிமுத்து மனைவிப்ப்பெண் என உருகி, கேரக்டரில் ஒன்றியிருக்கிறார்.  சிலம்பம் சுற்றும் அவர் மனைவி, சுரேஷின் அக்கா என அனைத்துப்பெண்களுமே வீராங்கனைகளாக சித்தரிக்கப்படுவதும் , அப்பாத்தா செண்டினெண்ட்ம் ப்ளஸ். ஆனால் இவர்களே புஸ் என ஆவது ஏமாற்றம் பின்வரும் காட்சிகளில்.

அப்பத்தாவின் கொலையை அத்தனைவிலாவரியா காமிப்பது..ஸ்ஷப்ப்பா..மிடில ரகம்.

கதைக்களமும், காட்சிகளும் ஏற்கனவே பார்த்தமாதிரி உள்ளது மைனஸ், அந்தக்குறைதெரியாமல் ஃப்ளாஷ் பேக் திரைக்கதை, வசனங்கள்  ப்ளஸ்.
பல இடங்களில் வசனங்கள் ரசிக்கவைக்கின்றன.
அப்பத்தாவாக வரும் லீலாவதி நடிப்பில் ஈர்க்க பின்னணி குரல் மட்டும் அவ்வப்போது வெளி நடப்பு செய்கிறது நடிப்புடன் ஒட்டாமல்.

பெண்மையை சிறப்பித்து, டீசெண்டாக்கிய இயக்குனருக்குப் பாராட்டுகள். டி.இமானின் இசையில் 4 பாடல்கள் : நினைவில் நிற்க முயல்கின்றன. பொருத்தமான ஆர் ஆர் தந்து அரவணைக்கிறார் நம்மையும் திரையில்.

எடிட்ட்ர் பிரவின் , ஆர்ட் டைரக்டர் என அவரவர் வேலையில் பர்பெக்ட் !

வேல்ராஜின் கேமரா வீடு, தோட்டம், மார்க்கெட் என கண்டபடி சவாரி செய்து அழகாக்கி காமிக்கிறது.

குழந்தைகள் தவிர்க்கவேண்டிய வன்முறைக்காட்சிகளை தவிர்த்தால் , ஐட்டம் டான்ஸ், அனாவசிய பாரீன் சாங் இல்லாமல் நம் கிராமிய மணத்துடன் நல்ல எண்டர்டெயின்மெண்ட் படம் இந்த மருது.

#சுமி_சினிமாஸ்

No comments:

Post a Comment