Sunday, 6 March 2016

மிருதன் - சுமிசினிமாஸ்

*ஒரு வாரம் முன்பே எழுதிய விமர்சனம் ப்ளாக்லயே காணோம் ,சோகத்துடன் மீண்டும் போஸ்டிங் :)

மிருகமாய் மாறிய மனிதன் மிருதன்.

டைட்டடிலை யோசித்திருக்கும் டீம் ஹாலிவுட் கதை , வீடியோ கேம்ஸ் தாக்கத்துடன் குத்துப்பாட்டு , க்ளப் சாங்க் , ரெட்டை அர்த்த வசனங்கள் குறிப்பாக பாரின் சாங்கில் விதவிதமான கலர்கலரான காஸ்டியூம்களில் ஹீரோயினுடனான டூயட் அத்தனையும் அப்பாலப்போ சாத்தானே என்றும் சாதாரண மனிதர்களையே வில்லன்களாக்கி தமிழ் சினிமாவின் முதல்  zombie  படம் என்ற வகையிலும் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜனின் இந்த முயற்சிக்கு நம் பாராட்டுகள்.

ட்ராபிக் போலீஸாக ஜெயம் ரவி (கார்த்திக்)உடல் கட்டுடன் , வீரமான நேர்மையான அதிகாரி , ஊட்டியில் பணி , ஒரு விபத்தில் உதவும் டாக்டர் லஷ்மிமேனனை ஒருதலையாக மனதில் டிக் அடித்து அவருடன் எடுத்த செல்பீயை பர்ஸில் வைத்து அழகுப்பார்க்கிறார். 

ஓவர் ஸ்மார்டட்டாக பேசும் குட்டிதங்கை முதலிலேயே தங்கை செண்டிமெண்ட் முன் வைக்கப்பட , என்னதான் படம் என யோசிக்க ஆரம்பிக்கும் போதே

ரேடியோ ஆக்டிவ் மெட்டிரியல் அதற்கான வாகனத்தில் கொண்டு செல்லப்படும்போது , சிந்தியதை குடிக்கும் நாய் மூலம் பரவும் வைரஸால் ஊரே சோம்பிக்களின் மயமாக்கல் திகில் ஊட்டும் காட்சிகள்.

தங்கையை தேடும்போது , தானும் இலக்காக எமர்ஜென்ஸியில் காவல்துறை மீட்டிங்கிலேயே கடிப்பட்டு பாதிக்கப்படுபவர்கள் கொடிய மிருகத்தைப்போன்றவர்கள் ஆபத்தானவர்கள் அவர்களை சுடுவதைத்தவிர வேறு வழியில்லை என்ற முடிவு..மேலும் திகிலில் உறையவைக்க , மருந்துக்கண்டுபிடிக்க போராடும் மருத்துவர் குழு, 
அவர்களை கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சேர்க்கும் அசைன்மெண்ட் ஹீரோ விற்கு. ஜெயம் ரவி மாறுபட்ட நடிப்புடன் க்ளைமேக்ஸ் காட்சிகளில் புது முகத்தைக் காண்பிக்கறார். 

மிருதன் 2 உங்கள் நடிப்பற்கு நல்லதீனி சார் . வாழ்த்துகள்.
லஷ்மிமேனன் என்னக் கல்யாணம் செய்துக்க இருக்கறவர் , என் அப்பா இப்படி யாருமே காப்பாத்த வராதபோது உனக்கு மட்டும் என்னடா எனும் காட்சியில் கரைந்து உறைய வைக்கிறார்.

 வழக்கமான தங்கை பாதிக்கப்பட அவர் மூலம் செண்டிமண்ட் சீன்ஸ் , பழிவாங்கல் என்றில்லாமல் , அதையே திருப்புமுனை க் காட்சிகளாக்கிய திரைக்கதை ஆசம்.
லஷ்மி மேனன் பொறுப்பான டாக்டர், முதலில் அவர்களுக்கு வந்துருக்கறது ஒரு நோய் , குணப்படுத்தலாம் அது ஒரு வைரஸ் , இப்படி சுடக்கூடாது என்றும் அதே தான் ஒருவரால் பாதிக்கப்படும்போது..சுடுங்க எனும் காட்சியும் அப்போது ஜெயம் ரவி அவர் நண்பர்  பேசிக்கொள்ளும் வசனங்களும் சீரியஸ் மோட்ல் பார்க்கும் நம்மை ரிலாக்ஸ் செய்கின்றன.

நண்பராக வரும் காளி வெங்கட் சுடத்தெரியாமல் காமெடி செய்ய நம்மையறியாமல் சிரிக்கிறோம்..

முன்பாதி விறுவிறுப்பு , பின்பாதி...அதே சுடுதல் , போராட்டம் , பார்ப்பது படமா வீடியோ கேம்ஸ் ஆ என்ற உணர்வை அளிக்கின்றன.

ட்ராபிக் இன்ஸ்பெக்டர் க்கு இத்தனை சரியாக சுடத்தெரியுமா , அவர் மட்டுமே காப்பாற்ற டிப்பார்ட்மெண்டில் உள்ளாரா , மற்ற காவல் துறை அதிகாரிகள் என்ன ஆனார்கள்,

 கதை இந்தகாலக்கட்டம் என்பதால் மீடியா என்ற ஒன்று இருப்பதே மறந்துப்போனதா இயக்குனருக்கு ? அத்தனை சீக்கிரம் ஊட்டியிலிருந்து கோவைக்குப் பரவும் வரை அரசு இயந்திரம் சும்மா இருக்குமா !

அரசியல்வாதியாக மனோஹர் , என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என அந்த எமர்ஜென்ஸி நேரத்தில் கூறுவது திணிக்கப்பட்டதாகவே தெரிகிறது. தேவையான அடக்கிவாசிக்கும் பின்னணி இசை , ஒரேபாடல் அதுவும் காட்சிக்கு தகுந்த இடத்தில் பொருந்திபோகின்றன.

 இசை இமான் .
பரபர எடிட்டிங் , காஸ்டியூம் , ஆர்ட் டைரக்டர் என அவரவர் வேலையை செய்திருக்க , ஸ்டண்ட் டைரக்டருக்கும் பெரிதும் வேலையில்லாமல் கண்ணில் படுபவரையெல்லாம் சுட்டுத்தள்ளுகின்றனர்.

ஆக்‌ஷ்ன் த்ரில்லர் திரைப்படக்காமிராமேன்களின் வேலையை வெங்கட் திறம்பட செய்திருக்கிறார்.

இதில் மிருதன்2 வா என நம் கண்களில் பீதி பரவ படத்தை முடிக்கின்றன.இப்படி ஒரு நிலை வந்தால் என்னாகும் , பக்கவாட்டிலிருந்து பாய்ந்தால் நம் நிலை என்ன என்று எண்ணாமலிருக்க முடியவில்லை.

மிருதன் மிரட்டுகிறான்.

சுமி_சினிமாஸ்


No comments:

Post a Comment